வாத்து மேய்க்க வந்து 5 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக வந்த புகாரை அடுத்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி சாத்தமங்கலம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வாத்து பண்ணை நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த 6 வயது முதல் 14 வயது உள்ள 5 சிறுமிகளை கடந்த 2 வருடங்களாக கொத்தடிமைகளாக வைத்து வாத்து மெய்க்கும் வேலை செய்ய வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து கடந்த மாதம் குழந்தைகள் நல அமைப்பினர் 5 சிறுமிகளையும் மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
அப்போது அந்த சிறுமிகளுக்கு மருத்துவர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது, அப்போது அந்த சிறுமிகள் தங்களை கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி உள்ளனர்.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் புதுச்சேரி குழந்தைகள் நல ஆணையத்திடம் தெரிவித்தனர். இதனை அடுத்து குழந்தைகள் நல ஆணையத்தினர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரை அடுத்து நடத்திய விசாரணையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து பன்னை உரிமையாளர் கன்னியப்பன் அவரின் மகன் ராஜ்குமார் மற்றும் அவரின் உறவினர்கள் சிவா, பசுபதி, அய்யனார் மற்றும் மூர்த்தி ஆகியோரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை தேடி வருகின்றனர்.