ஜார்க்கண்டில் மூன்று வயது சிறுமி, தன்னை 12 வயது சிறுவன் வன்புணர்வுக்குட்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த நவம்பர் 4ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நவம்பர் 4 ம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை மாலை பொலிஸாரிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் படி, பர்சூதி காவல் நிலைய பகுதியில் உள்ள லோகோ காலனியில் வாடகைக்கு தங்கியிருந்தபோது, தனது பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஊருக்கு வெளியே இருந்ததால் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய தாமதமானது என குடும்பத்தார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.