இலங்கையில் 36ஆவது கொரோனா மரணம், கந்தானையில் இடம்பெற்றுள்ளது.
கந்தானையைச் சேர்ந்த 84வயதான பெண்ணொருவர், தனியார் வைத்தியசாலையில் இருந்து, ஐடி எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
நீண்டகாலமாக நோய்வாய்பட்டிருந்த அந்தப்பெண், கொவிட் நிமோனியா நிலைக்குச் சென்றமையால் மரணமடைந்துள்ளார்.
இலங்கையில் கொவிட்-19 இல் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களில் 36ஆவது மரணமாகுமென வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.