இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 10 – மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறித்த பெண் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளில் கொவிட் தொற்றுடன், அதிக இரத்த அழுத்தமும் இந்த உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்றைய தினத்தில் 4 பேரின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.