மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.