web log free
January 10, 2025

“கருணா ஒரு காமெடி பீஸ்“

கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச் சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் தனது பிறந்த நாள் தினத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கியபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை நான் ஒரு அரசியல்வாதியாக கூட கணக்கெடுப்பதில்லை ஏன் ஒரு மனிதனாக கூட கணக்கெடுப்பதில்லை. அவர் ஒரு காமெடி பீஸ்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டது. அந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இன்னும் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டங்கள் வழங்கப்படவுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd