கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான பிரசாரத்தை முன்னெடுத்த நபர், கண்டி ஹன்தான பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரால் வீதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதாக, சுகாதார சேவை தொடர்பில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.