2021 ஆம் ஆண்டுகான வரவு- செலவுத்திட்டம் நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது பாராளுமன்றத்தில் முன்வைத்து கொண்டிருக்கின்றார்.
பட்ஜெட் யோசனைகளில் சில...
தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் முதலீடுக்கு கவனம். ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மக்கள் பாதுகாப்பை மேம்பாட்டுத்துவதற்காக, மேலதிகமாக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு 8,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வர்த்தக மையம் செயல்படுத்தப்பட உள்ளது.
மக்கள் பாதுகாப்பை மேம்பாட்டுத்துவதற்காக, மேலதிகமாக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் முதலீடுக்கு கவனம். ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
சமூர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம்
தேசிய சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூர்த்தி வங்கிகள் ஊடாக பயனாளிகளுக்கு கணக்கைத் திறந்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் அந்தக் கணக்கில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை
மாதத்துக்கு 2இலட்சம் 50ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும்
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்க வேண்டியதன் காரணமாக அரசாங்க திட்டங்கள் முடங்கியுள்ளன.
விவசாய, மீன்பிடி துறையில் அறவிடப்படும் வருமான வரி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு நீக்கப்படும்