கண்டி மாவட்டத்தில் சில இடங்கள் நிலம் அதிர்வதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இன்றுக்காலை 9.40 மணியளவிலேயே நிலம் அதிர்வதை தாம் உணர்ந்ததாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்தனர்.
கண்டி – திகண பகுதியிலேயே மீண்டும் நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலஅதிர்வு இன்று பதிவாகியதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகத்தின் பணிப்பாளர் சஞ்ஜீவ டி சில்வா, தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முழுமையாக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என கூறிய அவர், விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அதிர்வினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, கண்டி – திகண பகுதியை அண்மித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி முதல் தடவையாக நிலஅதிர்வொன்று பதிவாகியிருந்தது.
அதன்பின்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலஅதிர்வுகள் பதிவாகியிருந்த நிலையில், மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது