ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரான கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில்,விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானது.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், துறைமுக அதிகார சபையின் கீழுள்ள சகல சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.