நடிகை குஷ்பு மேல்மருவத்தூர் செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்ட்டவசமாக நடிகை குஷ்புவுக்கு ஏதும் ஆகவில்லை.
ஆனால் அவர் பயணித்த வாகனம் சுக்குநூறாக நொறுங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில் மேல்மருவத்தூர் அருகே லொறி மோதியதால் கார் விபத்து ஏற்பட்டது. இறைவனின் அருளால் நான் பத்திரமாக உள்ளேன்.
இதைத்தொடர்ந்து கடலூரில் நடக்கும் வேல் யாத்திரைக்கு செல்லவிருக்கிறேன். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
எனது கணவர் கடவுள் முருகன் மேல் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை என்று பதிவு செய்துள்ளார்.