web log free
September 10, 2025

ரிஷாட்டின் கோரிக்கை குப்பையில் வீசப்பட்டது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தொடர்பில்,  அவரது சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட  கோரிக்கையொன்றை, உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று நிராகரித்துள்ளது.

கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால், ரிஷாட்டிடம் சிறையிலிருந்தவாரே விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விடுத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரிஷாட் பதியூதினின் பிரதிநிதியாக விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த நபரொருவர், நேற்றைய விசாரணைகளை இரகசியமாக ஒளிப்பதிவு செய்துள்ளமையால், ரிஷாட் தரப்பினர் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றால், விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் ஆணைக்குழுவுக்கு வெளியிலிருந்து செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ரிஷாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நபரொருவர் ஊடகவியலாளர்களுக்கு மத்தியிலிருந்து இந்த விசாரணைகளை ஒளிப்பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd