கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இன்று பெரும்பாலும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்தார்.
கடந்த 9ம் திகதி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்கு மீளத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் கொரோனா நெருக்கடி காரணமாக 23ம் திகதி வரை அந்த தீர்மானம் பிற்போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூடி பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து பேச்சு நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.