web log free
January 10, 2025

பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

திருமணம் நடந்தால் பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவருடைய மகள் அமிர்தா.

அமிர்தாவும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் ஆர்யா ஆகிய இருவரும் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துவந்துள்ளனர்.

இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதனையடுத்து அமிர்தாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழி ஆர்யாவிடம் கூறியுள்ளார் .

தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல நேரிடும். எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் கூறியுள்ளார்.
மேலும், எனக்கு எனது தோழியை பிரிந்து வாழமுடியாது. எனவே எனக்கு திருமணம் வேண்டாம் என அவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து தோழிகள் இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.

இதனால் மனமுடைந்த தோழிகள் இருவரும் ஒன்றாக இறந்துவிடலாம் என முடிவெடுத்து அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த 14 ஆம் திகதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியே சென்று அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு மூவாற்றுப்புழா ஆற்றுக்கு சென்று இருவரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர்.

இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த இருவரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அமர்தா மற்றும் ஆர்யாவின் உடல் மீட்கப்பட்டது.

Last modified on Thursday, 19 November 2020 04:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd