web log free
April 06, 2026

வில்பத்து தீர்ப்புக்கு திகதி குறிப்பு


வில்பத்து சரணாலயத்தை அழித்து குடியேற்றங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், திகதி குறித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தையும் அதனை அண்டிய வனாந்தரத்தையும் அழித்து, குடியேற்றங்கள் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டியே இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக குமுதின் விக்கிரமசிங்க, மஹிந்த சமயவர்தன ஆகியோரே தீர்ப்புக்கான திகதியை குறித்தனர்.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்படுவதற்கு இருந்தது. எனினும், நீதியரசர்களில் ஒருவர், தயாராக வராமையினால், அந்த வழக்கின் தீர்ப்புக்கான திகதி பிற்போடப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd