கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கம்பஹாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் பிரதேசங்கள் மற்றும் களுத்துறையில் முடக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பிலான விவரங்களும் வெளியாகியுள்ளன.
கம்பஹாவில்...
கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கடவத்த ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (23) காலை 5 மணியுடன் நீக்கப்படும்.
ஆனால்,நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட, களனி ஆகியன பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறையில்…
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பொலிஸ் பிரிவில், போகஹவத்த, பமுனுமுல்ல (முஸ்லிம்) கிரிமத்துடாவ, கொரோவல, அட்டலுகம மேற்கு, கலகஹமண்டிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.