பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சன்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அலரி மாளிகை இந்த வாரத்தில் முடக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்திருக்கும் சண்டே ரைம்ஸ், “மறு அறிவித்தல் வரை பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை” என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பிரதமரின் அலுவலகம் முடக்கப்பட்டிருப்பது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அலரிமாளிகையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள விஷேட அதிரடிப்படையினர் பலருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அலரிமாளிகையைத் தனிமைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.