அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலக சபையின் பிரதானி யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, அலரி மாளிகையின் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருமி தொற்று நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் சில மணித்தியாலங்களுக்கு அலரி மாளிகையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர்,அலரி மாளிகைளில் கடமைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார விதிமுறைகளின் கீழ் செயற்படுவதாகவும் பிரதமர் அலுவலக சபையின் பிரதானி யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த சில நாள்களுக்கு முன்னர், அலரிமாளிகைக்கு இணைவாக கடமையாற்றிய பாதுகாப்பு அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.