நாட்டின் பாரிய மோசடியாக கருதப்படும் மத்திய வங்கி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து குற்றவாளிகளை நாட்டு மக்களின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் மாற்றமடையும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சந்தர்ப்பம் கிடைக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்;.
இலஞ்சம், ஊழல், திருட்டு போன்றவை வேரூன்றி போயிருக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு கணக்காய்வு சேவையை வலுவூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பத்தரமுல்ல, கணக்காய்வு திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (27) இடம்பெற்ற இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் 61ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.