முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஏனையோருக்கும் பதவிகளுக்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமென்றும் தெரியவருகின்றது.
இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில், அகிலவிராஜ் தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முயற்சித்த போதும், கட்சியின் பிரதானியால் அவர் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று இறுதித் தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் யார் என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக விசேட கலந்துரையாடல், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (23) இடம்பெறவுள்ளது.
தேசியப்பட்டியல் உறுப்புரிமையை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டதாக, கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், இன்றைய தினத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, அவர் கூறியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றது.
எனினும், அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இன்று வரை இழுபறியான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.