உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில். கொரோனா தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு நீங்களாகவே பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.