ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(23) முற்பகல் குறித்த கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.