எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு ஆளும் கட்சிக்குள் இருக்கும் அமைச்சர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்கும் நோக்கிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
எனினும், “வியத்மக” உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வழங்கும் வகையிலேயே அமைச்சரவை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள அறியமுடிகின்றது.
அதிலும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த சரத் வீரசேகரவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.
அதுவும் பாதுகாப்பு அமைச்சு பதவியே அவருக்கு வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு கடும் எதிர்ப்பை அமைச்சர் விமல் வீரவன்சவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவும் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.