web log free
January 10, 2025

கண்டியில் பேரச்சம்: பாடசாலைகளுக்கு பூட்டு

 

கண்டி நகர எல்லைக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்ததாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வது உரிய நடவடிக்கை இல்லையென, பெற்றோர் தொடர்ச்சியாக பாடசாலை குழுக்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளையும் நாளை தொடக்கம் மூடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி-அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Last modified on Wednesday, 25 November 2020 16:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd