முறிகள் மோசடி தொடர்பில் சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரிடம், நீதியமைச்சர் அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கை இன்று அல்லது நாளை கிடைக்கப்பெறலாம் என, நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.