இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 521 கொரோனா தொற்றாளர்களில் 342 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 91 பேர் கண்டியை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் 81 பேருக்கும் வெலிக்கடையில் 73 பேருக்கும் தெமட்டகொடவில் 59 பேருக்கும் மருதானையில் 38 பேருக்கும் மட்டக்குளியில் 31 பேருக்கும் வெள்ளவத்தையில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு 44 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அம்பாறையில் 17 பேரும் கம்பஹாவில் 11 பேரும் புத்தளத்தில் 04 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளத்தில் 03 பேரும் நுவரெலியா மற்றும் இரத்தினபுரியில் மேலும் 02 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு காலியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 19 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 991 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 130 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.