மேல் மாகாணம் பண்டிகை காலங்களில் முழுமையாக முடக்கப்படாது ஆனால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தொற்றாளர் அடையாளம் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் குறித்து கொழும்பில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பண்டிகை காலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் நிலைமை மீளாய்வு செய்யப்படும் என்றும் தேவையின்றி ஒன்று கூடுவதை தடுக்க மேலதிக சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.