கம்பஹா – திஹாரி பகுதியிலுள்ள மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை நிராகரித்து வருவதாக மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
திஹாரி மக்கள் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் குறித்த பகுதியை தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலுள்ள மக்களும் பி.சி.ஆர் பரிசோதனைகளை நிராகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.