முகக்கவசம் அணியாமல் சென்றமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றாத மேலும் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை 1151 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.