கல்கிஸை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் இலங்கையின் தேசிய மொழிகளான தமிழ், சிங்களம் இல்லாமல் ஆங்கிலமும் சீன மொழியிலும் அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பின்னரே, தான் இது தொடர்பில் அறிந்து கொண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பு பலகையானது தான் பொதுமுகாமையாளராக வருவதற்கு முன்னரே பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த அறிவிப்பு பலகை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.