நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை – பிளக்வோட்டர் தோட்டத்தில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தத் தோட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கும், அந்தப் பகுதிக்குள் வெளியார் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.