இலங்கையில் மிகக் குறைந்த வயதான கொவிட் உயிரிழப்பு நேற்று (08) பதிவாகியுள்ளது. 20 நாட்களே ஆன சிசு ஒன்று, கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொரள்ளை சீமாட்டி றிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையிலேயே இந்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கையில் கொவிட் தொற்றினால் மிக குறைந்த வயதான ஒருவர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனதியா காய்ச்சலே இந்த உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.