கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள இலங்கை தூதரகத்தின் கொன்சியூலர் சேவை அலுவலகம் தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
கொன்சியூலர் அலுவலகத்தில் பணிபுரியும் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து இன்று முதல் வருகின்ற 15ஆம் திகதிவரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் கொன்சியூலர் அலுவலகம் தொற்று நீக்கலுக்கு உட்படுகின்ற அதேவேளை, மீளத்திறப்பது குறித்த அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும்.
இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்ள 388 724 90 16 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.