ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அண்மையில் விலகியிருந்தார்.
தொடர்ந்து பதில் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் எம்.பி ரங்கே பண்டாரவின் பெயரும் அப்பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.