இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தும் நடைமுறைக்கு எதிராக ‘கபன் சீலை’ அமைதிப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொரோனா காரணமாக உயிரிழந்த 20 நாள் குழந்தை பெற்றோரின் ஒப்புதலின்றி எரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த அமைதி ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் ஜனாஸாக்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தும் வெள்ளைத் துணியே ‘கபன் சீலை’ என்று அழைக்கப்படுகின்றது.
குறித்த வெள்ளைத் துணியை பொரளை பொது அடக்கஸ்தளத்தின் சுற்று வேலிகள் கட்டி, இந்த அமைதிப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இந்த அமைதி எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் கபன் சீலைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.