இலங்கையில் புத்தாண்டு, கிறிஸ்மஸ் பண்டிகைகளின் போது, அதிகளவான இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் விருந்துபசார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி நடந்துகொள்ளுமாறும், தனிமைப்படுத்தல் சட்டங்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பண்டிகை காலங்களில் கொண்டாட்டங்களை தமது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவதோடு மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், பண்டிகை காலங்களில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றும் செயற்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.