உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த 09 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்க கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.