அநுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹல பலல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் 32 வயதுடைய தாயும் மூன்றரை வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று(15) மாலை சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய மூவரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.