கம்பஹா மாவட்டத்தின் வெலிசறை சுவாச நோய்க்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – கிரேண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறாக வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மருதானை பிரதேசத்தில் வசிப்பதாக போலியான முகவரியை வழங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அவர் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இதன்படி அவரைக் கண்டுபிடிக்க விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.