நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயது ஆண் கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 15 மட்டக்குளி பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவர்களுடைய மரணத்துக்கு கொவிட் தொற்றுடன் கூடிய நியுமோனியா என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று (15) குறித்த மரணங்கள் அறிக்கையிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.