நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 78 வயது ஆண் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயது பெண், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் 16ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.