இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தினை திறந்து வைப்பதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகிறார்.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில்விவசாய பயன்பாட்டுக்கு பாவிக்கமுடியாத நிலையில் காணப்பட்ட குளம் ஒன்று ராணுவத்தினரால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புணர்நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கை யளிப்பதற்காகவே விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.