கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான தாய்க்கு, ஒரே சூலில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்க்கே, இவ்வாறு சிசுக்கள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை குறித்த தாய் பிரசவித்துள்ளார்.
தாயும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.