web log free
January 10, 2025

இராணுவத் தளபதி, உப்புவயலை திறந்துவைத்தார்



வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவதளபதி சவீந்திரா சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறிக்கொடை நிறுவனத்தினரின் நிதிப் பங்களிப்பில் வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவத்தினரால் கடந்த மூன்று மாதமாக புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும் ராணுவ தளபதியுமான லெப் ஜெனரல் சவேந்திர சில்வா திறந்து வைத்தார்

யாழ் நண்பர்கள்.அமைப்பு, வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last modified on Thursday, 17 December 2020 08:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd