கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே தேசிய சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையிலேயே குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா தொற்று காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 8ஆம் திகதி பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்ற இதே வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.