திருச்சியில் 17 வயது மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய எதிர்வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி கல்லக்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர்களின் எதிர்வீட்டில் திருமணமான பிரித்திவி என்ற இளைஞர் மனைவியுடன் வசித்து வருகிறார். வெளியில் சென்று வீடு திரும்பும் போதெல்லாம் பிரித்திவி கிண்டல் செய்ததால் ஒருமுறை கடுமையான வார்த்தைகளால் மாணவி திட்டியுள்ளார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாணவியின் பெற்றோர் மற்றும் அண்ணன் வெளியில் சென்றுவிட அதனை தெரிந்து கொண்ட பிரித்திவி அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் என பெற்றோரிடம் மாணவி விசயத்தை மறைக்க தற்போது அவர் கர்ப்பம் ஆனதால் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.
மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பிருத்திவி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். கர்ப்பமான மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.