web log free
September 09, 2025

திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் குழப்ப நிலை



வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வீதிகளின் சீரமைப்பு பணிகளுக்கு சிலர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த பணிகள் நேற்று நடைப்பெற்ற வேளை அங்கு சென்ற சிலர் இடையூறு விளைவித்து, அலங்கார பதாதைகள் மீது தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் திருக்கேதீஸ்வர யாத்திரியர்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட போதும், எவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் மக்கள் கவலை விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் நிறைவடைந்த பின்னரே குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd