விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை, எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பது தொடர்பில் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்