பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இதில் தீர்க்கமான முடிவு எட்டப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா வரை நாட்சம்பள அதிகரிப்பு மாத்திரமன்றி, மலையக தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
மலையக தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற்துறையை இழிவுபடுத்தும் சிலரும் தமது சமூகத்தில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.