மேல் மாகாணம் மற்றும் முடக்கபட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை, ஜனவரி மாதம் 11 ஆம் திகதி, கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இதனை தெரிவித்தார்.